Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

ரஷ்ய பெண்களின் அழகு பராமரிப்பு ரகசியம் என்ன தெரியுமா?

ரஷ்ய பெண்களின் அழகு பராமரிப்பு ரகசியம் என்ன தெரியுமா?

ஒவ்வொரு பெண்ணும் தான் அழகாக இருக்க வேண்டுமென்றே விரும்புவாள். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய பெண்கள் தயாராக இருக்கின்றனர். நாம் என்ன தான் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்தாலும், ரஷ்ய பெண்களின் சருமத்தை போல் நம் சருமம் பொலிவாக இருப்பதில்லை. ஏன் ரஷ்ய பெண்களை குறிப்பிட்டு கூறுகிறேன் என்றால், உலக அளவில் அழகான பெண்களுக்கான பட்டியலில் ரஷ்ய பெண்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். சரி அப்படி அழகாக இருக்க அவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். உங்களது அத்தகைய சந்தேகத்தைப் போக்க தான் இந்த கட்டுரையைப் பதிவிடுகிறேன். ரஷ்ய பெண்கள் தங்களது அழகை தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவை தெரிந்தால் நாமும் அவற்றைப் பின்பற்றி அவர்களை போல் மாசுற்ற அழகான சருமத்தைப் பெற்றிடலாம் அல்லவா? சரி வாருங்கள், அவர்களுடையே அன்றாட சரும பராமரிப்பு முறைகளை இப்போது தெரிந்து கொள்வோம்…

ரோஸ் வாட்டர்

ரஷ்ய பெண்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ரோஸ் வாட்டரால் தங்களது முகத்தை துடைப்பார்களாம். ஆம் அதற்கு, முதலில் காலையில் எழுந்தவுடன் உங்களது முகத்தை ரோஸ் வாட்டர் க்ளென்ஸர் பயன்படுத்தி முகத்தை துடைத்து விட்டு, பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவிடவும்.

நீராவி குளியல் (Steam bath)

இன்றைய மாசுபட்ட சுற்றுச்சூழலால் முகத்தில் பல வகையான தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் குவிந்து, அதனால் சருமத் துளைகள் அடைக்கப்படுகின்றன. இதனால், முகத்தில் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற அனைத்துப் பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்கும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ரஷ்ய பெண்கள் ஆவி பிடிப்பார்களாம். கொதிக்க வைத்த சுத்தமான நீரில் இருந்து வெளிவரும் நீராவியில் முகத்தை காட்டுவதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமத்துளைகள் திறந்து நன்கு சுவாசிக்கும். இதனால் சருமம் மிக பொலிவாக மாறும்.

ஸ்ட்ராபெரி மாஸ்க்

இந்த மாஸ்க் செய்ய, 100 கிராம் ஸ்ட்ராபெர்ரி, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதன் பிறகு, தயாரித்து வைத்துள்ள பேஸ்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர், கை விரல்களால் அப்படியே மெதுவாக தேய்த்து மசாஜ் செய்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிடவும். இவ்வாறு செய்வதால் முகம் பளபளவென ஜொலிக்கும். ரஷ்ய பெண்களின் முகம் ஜொலிப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.

வெள்ளரிக்காய்

ரஷ்யப் பெண்களும் தங்கள் சருமப் பராமரிப்பில் வெள்ளரிச் சாற்றை முக்கியமாக பயன்படுத்துகிறார்கள். உண்மையில், வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு பொலிவை அளித்து, குறைபாடற்ற அழகான சருமத்தைக் கொடுக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் சரும பராமரிப்பு குறிப்புகளில் இனி வெள்ளரிக்காயின் சாற்றைப் பயன்படுத்துங்கள் நல்லதொரு மாற்றம் தெரியும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →